இந்த blog-ல் என்னுடன் இனைந்து அன்னியன் மாதிரி அடிக்கடி எனக்குள்ளே இருந்து வெளிய வந்து இம்சைகளைக் கூட்டும் சில multiple personality character-களும் கிறுக்கப்போகிறார்கள். கிறுக்கப்போகும் அந்த character-களை பற்றிய ஒரு குட்டி INTRO:

முதல்ல வளைச்சு வளைச்சு check வைக்கப் போகும் checkmate செல்லத்துரை. next-ட்டு நாடு உருப்பட சில பல சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்யப்போகும் சட்டதுரை. future-ல் இன்னும் சில புது charachter-களும் எதிர்பார்க்கப் படுகிறார்கள்......

Thursday, October 21, 2010

CENTRAL-லுக்கு SALUTE..!! STATE-க்கு CHECK...!!

(100 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்)


நடுவண் அரசு செய்த ஒரு சில நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று. பலருடைய பசியைப் போக்கிய திட்டம். அதற்காக Central-க்கு ஒரு Military Salute.


ஆனால்,...இந்தத் திட்டத்தை மாநிலங்கள் எவ்வாறு திறமையாக கையாளுகின்றன என்பதில் தான் இந்தத் திட்டத்தின் முழு வெற்றி அடங்கியிருக்கிறது.

தமிழகத்தில்,

சும்மா இருந்து விட்டு சம்பளம் வங்கிச் செல்கிறார்கள், குழி தோண்டுவது அதை மூடுவது மீண்டும் தோண்டுவது என்று வேலை அற்ற வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாய வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் கூட சும்மா இருப்பதற்கு சம்பளம் கிடைக்கிறதே என்று இங்கு வரத் துவங்கிவிட்டனர். கடைசியில் ஆட்கள் கிடைக்காமல் தவிப்பது விவசாயிகள். விவசாய நாடு என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது, உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும். ஏற்கனவே இருக்கிற விவசாய நிலங்களையெல்லாம் flat போட்டு அழித்துக் கொண்டிருக்கிறார்கள், இதில் இது வேறு....

ஆனால் கேரள மாநிலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா...?

கிடைக்கும் மனித உழைப்பை வைத்து வெட்டி வேலை செய்து வீணாக்காமல், விவசாயிகளுடன் கை கோர்த்து வேலை இல்லாதவர்களுக்கு 100 நாள் வேலையையும் உறுதி செய்து அரசுப் பணத்தையும் மிச்சம் செய்து வருகிறார்கள். இது புத்திசாலித்தனம்.

இதே யோசனையை நம் மாண்புமிகு முதல்வரிடம் எடுத்து கூறியிருந்தால் அவரும் கூட தான் அமல்படுத்தி இருப்பார் என்கிற உங்கள் mind voice கேட்கிறது.

அமைச்சரவை கூட்டத்தில் இதை எடுத்துச் சொன்னார் அமைச்சர் திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன், அவருக்கு நம்ம Doctor அளித்த பதில் (பதில்-னு சொல்றத விட bulb-னு சொன்ன correct-அ set ஆகும்) என்ன தெரியுமா....?

"இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீயே ஆண்டுடிருப்ப, காலத்துக்கும் உன் கிட்ட கொத்தடிமயா இருக்கனும்னு நினைக்கிறயா....."


நமது மாண்புமிகு Dr.முதல்வர் இன்னும் எந்த நுற்றாண்டில் இருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை, Doctor Sir இது 2010.....

அவர் சொன்னது போலவும் ஒரு காலத்தில் இருந்தது, பெரும் ஜமீன்தார்களிடம் பலர் கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள், இன்னிக்கு நிலைமை அப்படியா இருக்கு எதுக்கெடுத்தாலும் strike-னு குதிச்சிறாங்க. அதுவும் இல்லாம, இப்ப 20 ஏக்கர் 30 ஏக்கர்-னு நிலம் வசிருக்கிரவங்க எல்லாம் ஆள் வச்சா கட்டுபடி ஆகாதுனு modern agriculture-க்கு மாறிடாங்க. உழவுக்கு tractor-ல ஆரம்பிச்சு களை பறிக்க tiller தண்ணி பாய்ச்ச சொட்டு நீர் பாசனம்னு எல்லா வேலையும் machine தான் செய்து. அதனால அவங்களுக்கு எந்த ஆள் பற்றாகுறையும் இல்லை.

ஆள் கிடைக்காம, விவசாயம் செய்ய முடியாம அவதிப்படுறது 1 ஏக்கர் 2 ஏக்கர்னு வச்சிருக்கிற குறு விவசாயிகள் தான். குறு விவசாயிகள் கிட்ட சம்பளத்துக்கு வேலை செஞ்சா அது கொத்தடிமைத்தனமா., அப்படி நம்ம Doctor சொல்லறபடி பாத்தா software engineers, government officers-னு அத்தனை பேரும் கொத்தடிமைகள் தான். அங்க எல்லாம் வேலை செய்யளாம் விவசாயம் பண்ணக் கூடாதா...?


CHECKMATE


நிலைமை இப்படி இருக்க, இது போன்ற நல்ல யோசனையை நமது மாண்புமிகு மரியாதைக்குறிய டாக்டர் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏற்க மறுப்பது ஏன்.....?ஒரு சாதாரண அமைச்சர் சொல்லி நான் கேட்பதா என்ற  தலைக் கணமா....?

இல்லை

நான் ஏழைகளின் பங்காளன் என்று காட்டிக் கொள்ளப் போடும் கபட நாடகமா...?

இல்லை

விவசாயத்தின் மீது அக்கறையின்மையா...?

இல்லை

ஜாதி வெறியா...?-checkmate செல்லத்துரை
check- க்குகள் தொடரும்.....

Friday, August 27, 2010

புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டம்


இந்தச் சட்டத்தின் தற்பொழுதய அவசியம் :

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஜாதி வாரியான ஏற்றத் தாழ்வுகள் இருந்தன, அப்போழுது பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மிக அவசியமான ஒன்றாக இருந்தது ஆனால் இன்றோ இட ஒதுக்கீடு தவறாகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீட்டின் மூலம் IAS, IPS, engineer, doctor என்று முன்னேறிய பின்பும் தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக் கொண்டு தன் குழந்தைகளுக்கும் அதே இட ஒதுக்கீட்டை கேட்கின்றனர். உன்மையிலேயே இட ஒதுக்கீடு தேவைப்படும் வசதி வாய்ப்பற்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அது சரியாகப் போய்ச் சேருவதில்லை. லட்சக்கனக்கில் வருமானம் ஈட்டும் Doctor மகனும் கூலித் தொழிலாளியின் மகனும் ஒரே ஒதுக்கீட்டில் போட்டியிட்டால் எப்படிப் போய்ச் சேரும்...???? நம்ம சிவாஜி sir சொன்ன மாதிரி "rich get richer, poor get more poor"

இருக்கும் இட ஒதுக்கீடுகளே கேள்விக்குறி ஆகிவிட்ட சூழ்நிலையில் ஆள் ஆளுக்கு 5%, 10% என்று தனி இட ஒதுக்கீடு கேட்டு கிளம்பிவிடுகின்றனர்...!!!!

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இட ஒதுக்கீடு தேவையனவர்களுக்கு போய்ச் சேரவும் வருங்காலத்தில் சாதி வாரி இட ஒதுக்கீட்டை முழுமையாக ஒழித்துக்கட்டவும் தயார் செய்யப்பட்டது தான் இந்த புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டம்.

புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டம்

1. நூற்றுக் கணக்கில் இருக்கும் சாதிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, அவைகள் சார்ந்து இருக்கும் ஐந்து பிரிவுகள் (OC, BC, MBC, SC ST) மட்டுமே அனைத்து ஆவணங்களிலும் இனி குறிப்பிடப் பட வேண்டும்.
 • 1.அ. ஜாதிச் சான்றிதழ்கள்(community certificate) அனைத்தும் பிரிவுச் சான்றிதழ்களாக(category certificate) மாற்றப்பட்டு பிரிவுகள் மட்டுமே குறிப்பிடப் பட வேண்டும்.
 • 1.ஆ. ஆவணங்களில் ஜாதியை குறிப்பிடுவதோ குறிப்பிடச் சொல்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்
 • 1.இ. ஆண்டு வருமானம் ரூ.4,00,000 மேல் இருப்பவர்கள் எந்தப் பிரிவின் கீழ் இருந்தாலும் அவர்கள் அனைவரும் OC-யில் சேர்க்கப்பட வேண்டும்.


2. கல்லூரி, அரசுத் துரையில் பணி என்று இட ஒதுக்கீடு சம்மந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் பின் வரும் விதிகள் பொருந்தும்.
 • 2.அ. 0C பிரிவினருக்கு எந்த வகையான இட ஒதுக்கீடும் கிடையாது
 • 2.ஆ. BC மற்றும் MBC பிரிவினர் ஒரே ஒரு முறை மட்டும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தலாம் (ஒரு முறை இட ஒதுக்கீட்டை பயன்படுத்திவிட்டால், பயன்படுத்தியவரும் அவருடைய குடும்பத்தினரும் OC-யில் சேர்க்கப்படுவார்கள்)
 • 2.இ. SC மற்றும் ST பிரிவினர் ஒரே ஒரு முறை மட்டும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தலாம் (ஒரு முறை இட ஒதுக்கீட்டை பயன்படுத்திவிட்டால், பயன்படுத்தியவரும் அவருடைய குடும்பத்தினரும் BC-யில் சேர்க்கப்படுவார்கள்)
 • 2.ஈ. கல்வி உதவித் தொகைகள் பெறுவது போன்றவை இந்தக் கணக்கின் கீழ் வராது.
 • 2.உ. இட ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் இடம் பெற்று, அதனால் ஒருவருடைய பிரிவு SC, ST-யில் இருந்து BC-க்கோ, BC, MBC-யில் இருந்து OC-க்கோ மாற்றப்பட்டாலும் அவர் எந்தப் பிரிவின் கீழ் இட ஒதுக்கீட்டை பெற்றரோ அந்தப் பிரிவினருக்கு அக்கல்லூரியில் தரப்படும் கல்வி உதவித் தொகை மற்றும் இதர சலுகைகளை பெற தகுதியானவரே.
 • 2.ஊ. BC மற்றும் MBC பிரிவினர் OC-யில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு விதி 2.அ-வும் , SC மற்றும் ST பிரிவினர் BC-யில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு விதி 2.ஆ-வும் பொருந்தும்.
 • 2.எ. ஒரு குடும்பத்தில் கனவன் மனைவி ஆகிய இருவரும் வெவ்வேறு பிரிவினைச் சார்ந்தவர்களாக இருப்பின் இரு பிரிவுகளில் எது உயர்ந்த பிரிவோ அப்பிரிவே அந்தக் குடும்பத்தின் பிரிவாக மாற்றப் பட வேண்டும்.


3. மேலே 2-வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் என்ற வார்த்தையின் விளக்கம் பின்வருமாறு
 • 3.அ. இட ஒதுக்கீட்டை பயன்படுத்தியவரின் குடும்பம் என்பது, பயன்படுத்தியவரின் மனைவி/கனவர் அவர்களுடைய குழந்தைகள் மற்றும் சந்ததியினரையும் உள்ளடக்கியது.
 • 3.ஆ. இட ஒதுக்கீட்டை பயன்படுத்தியவரின் தாய் தந்தை சகோதரன் சகோதரி ஆகியோர் அவருடைய குடும்பதில் சேர்க்கப்படமாட்டார்கள்.


4. ஆவணங்கள் பராமரிப்பு மற்றும் பிரிவுகள் மாற்றம்
 • 4.அ. இட ஒதுக்கீடு சம்மந்தப்பட்ட அனைத்து குறிப்புகளும் சான்றிதழ்கள் வழங்கலும் கணினி மயமாக்கப் பட வேண்டும்.
 • 4.ஆ. இட ஒதுக்கீட்டின் மூலம் ஒருவருக்கு சலுகைகள் வழங்கிய பிறகு, இட ஒதுக்கீடு வழங்கிய அந்த நிறுவனம் சம்மந்தப்பட்ட நபரின் பிரிவுச் சான்றிதழில் "இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்பட்டது" என்ற வாசகங்களுடன் கூடிய தங்களது அலுவலக முத்திரையை பதிக்க வேண்டும்.
 • 4.இ. இட ஒதுக்கீடு வழங்கும் நிறுவனங்கள் அது குறித்த விவரத்தை உடனே அரசுக்கு அனுப்ப வேண்டும். அந்த விவரத்தைக் கொண்டு அரசுக் குறிப்புகளில் சம்மந்தப்பட்ட நபர் மற்றும் அவருடைய குடும்பதினரின் பிரிவுகள் மாற்றப்பட வேண்டும்.
 • 4.ஈ. சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அனுப்பும் குறிப்புகளை அரசுக் குறிப்புகளுடன் ஒப்பிட்டு, அந்த நபருக்கு சரியான பிரிவின் கீழ் தான் சலுகைகள் தரப்பட்டுள்ளதா இல்லை போலியான சான்றிதழ்கள் முலம் சலுகைகள் பெறப்பட்டுள்ளதா என்பதும் சரி பார்க்கப்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


5. இட ஒதுக்கீட்டுச் சதவிகிதம்(%)
 • 5.அ. இட ஒதுக்கீடு என்பது மொத்தம் உள்ள இடங்களில் 50%-திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • 5.ஆ. அந்தந்த பிரிவுகளில் உள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதங்கள் அமைய வேண்டும்.
 • 5.இ. SC, ST-யில் இருந்து BC-க்கும், BC, MBC-யில் இருந்து OC-க்கும் மக்கள் முன்னேறுவதால் அந்தந்த பிரிவுகளில் எற்படும் மக்கள் தொகை கணக்கின் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதங்கள் வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும்.


6. மேலே 5.இ-யில் குறிக்கப்பட்டுள்ளதின் அடிப்படையில் மக்கள் OC-யில் சேரச்சேர மற்ற பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டுச் சதவிகிதங்கள் குறைக்கப்பட்டு, ஒரு நிலையில் அனைவருமே மிகவும் முன்னேறிய பிரிவான OC-யில் சேர்க்கப்பட்டு சாதி வாரி இட ஒதுக்கீடு என்பதே முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். இதுவே இந்த புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இறுதிக் குறிக்கோள் (final goal).


7. அதன் பின் பொருளாதார ரீதியாக மட்டுமே ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில் அன்றைய பண மதிப்பீட்டின் படி ஆண்டு வருமானம் குறிப்பிட்ட தொகைக்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு 10% முதல் 25% வரை இட ஒதுக்கீடு தர புதிய சட்டம் ஒன்றை இயற்றலாம்.


- சட்டதுரை
 

Friday, July 23, 2010

கலைஞர் காப்பீட்டுத்திட்டம்
(அரசின் கையாளாகாத்தனமா...??? ஊழலா...???)


நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்காக அரசே premium செலுத்தும் ஒரு லட்சம் ரூபாய்க்கான மருத்துவக் காப்பீடு

காப்பீடு வழங்கும் நிறுவனம் - star health insurance company

இந்தக் காப்பீடுத்திட்டத்தின் மூலம் சில நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும், பல மருத்துவமனைகளில் எற்றுக்கோள்ளப் படுவதில்லை, குறைந்த செலவு ஆகும் சிகிச்சைகளுக்கு அதிக கட்டணம் காட்டி மருத்துவமனைகள் லாபம் ஈட்டுகின்றன, மொத்த காப்பீடுக்கும் குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்று பல குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டி உள்ள போதிலும் அதையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு வேறு கோணத்தில் இந்தக் காப்பீடுத்திட்டத்தினை பார்ப்போம்.

கேள்விகள்-(பதில்களை நான் சொல்வதைவிட நீங்களே சிந்திக்கவும்)

1. கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் அவசியம் என்ன...?

2. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டும் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுவது ஏன்...?

3. கோடிகளை காப்பீட்டில் கொட்டுவதற்கு பதிலாய் அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த செலவு செய்திருந்தால் ஏழை மக்கள் அனைவருமே photo-களும் அடையாள அட்டைகளும் இல்லாமலேயே இலவசமாக பயன் அடைந்திருப்பார்களே...?

4. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளின் இழிவு நிலையை ஒப்புக்கொண்டு, மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதை அரசே மான்யம் கொடுத்து ஊக்குவிக்கிறதா...?


CHECKMATE


அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த எங்களுக்கு வக்கில்லை, திறமையில்லை
ஆள விடுங்க சாமி என்று தங்கள் கையாளாகாத்தனத்தை கலைஞர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு ஒப்புக்கொள்ளப் போகிறாரா.....????????

அல்லது

எங்களுக்குத் திறனும் உண்டு, வக்கும் உண்டு... ஆனால், insurance company மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் amount வாங்கிக் கொண்டு மக்கள்(தன் மக்கள் அல்ல தமிழக மக்கள், பொதுமக்கள்) பணத்திலேயே மக்கள் மூஞ்சியில் கரியை
பூசினேன் என்று கூறி ஊழல் குற்றத்தை
ஏற்கப் போகிறாரா.....????????


இரண்டில் எதை ஏற்றுக்கொண்டாலும் சட்டப்படி உடனே பதவி விலகியாக வேண்டும்.-checkmate செல்லத்துரை
check- க்குகள் தொடரும்.....


.