இந்த blog-ல் என்னுடன் இனைந்து அன்னியன் மாதிரி அடிக்கடி எனக்குள்ளே இருந்து வெளிய வந்து இம்சைகளைக் கூட்டும் சில multiple personality character-களும் கிறுக்கப்போகிறார்கள். கிறுக்கப்போகும் அந்த character-களை பற்றிய ஒரு குட்டி INTRO:

முதல்ல வளைச்சு வளைச்சு check வைக்கப் போகும் checkmate செல்லத்துரை. next-ட்டு நாடு உருப்பட சில பல சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்யப்போகும் சட்டதுரை. future-ல் இன்னும் சில புது charachter-களும் எதிர்பார்க்கப் படுகிறார்கள்......

Friday, August 27, 2010

புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டம்


இந்தச் சட்டத்தின் தற்பொழுதய அவசியம் :

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஜாதி வாரியான ஏற்றத் தாழ்வுகள் இருந்தன, அப்போழுது பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மிக அவசியமான ஒன்றாக இருந்தது ஆனால் இன்றோ இட ஒதுக்கீடு தவறாகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இட ஒதுக்கீட்டின் மூலம் IAS, IPS, engineer, doctor என்று முன்னேறிய பின்பும் தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக் கொண்டு தன் குழந்தைகளுக்கும் அதே இட ஒதுக்கீட்டை கேட்கின்றனர். உன்மையிலேயே இட ஒதுக்கீடு தேவைப்படும் வசதி வாய்ப்பற்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அது சரியாகப் போய்ச் சேருவதில்லை. லட்சக்கனக்கில் வருமானம் ஈட்டும் Doctor மகனும் கூலித் தொழிலாளியின் மகனும் ஒரே ஒதுக்கீட்டில் போட்டியிட்டால் எப்படிப் போய்ச் சேரும்...???? நம்ம சிவாஜி sir சொன்ன மாதிரி "rich get richer, poor get more poor"

இருக்கும் இட ஒதுக்கீடுகளே கேள்விக்குறி ஆகிவிட்ட சூழ்நிலையில் ஆள் ஆளுக்கு 5%, 10% என்று தனி இட ஒதுக்கீடு கேட்டு கிளம்பிவிடுகின்றனர்...!!!!

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இட ஒதுக்கீடு தேவையனவர்களுக்கு போய்ச் சேரவும் வருங்காலத்தில் சாதி வாரி இட ஒதுக்கீட்டை முழுமையாக ஒழித்துக்கட்டவும் தயார் செய்யப்பட்டது தான் இந்த புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டம்.

புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டம்

1. நூற்றுக் கணக்கில் இருக்கும் சாதிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, அவைகள் சார்ந்து இருக்கும் ஐந்து பிரிவுகள் (OC, BC, MBC, SC ST) மட்டுமே அனைத்து ஆவணங்களிலும் இனி குறிப்பிடப் பட வேண்டும்.
  • 1.அ. ஜாதிச் சான்றிதழ்கள்(community certificate) அனைத்தும் பிரிவுச் சான்றிதழ்களாக(category certificate) மாற்றப்பட்டு பிரிவுகள் மட்டுமே குறிப்பிடப் பட வேண்டும்.
  • 1.ஆ. ஆவணங்களில் ஜாதியை குறிப்பிடுவதோ குறிப்பிடச் சொல்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்
  • 1.இ. ஆண்டு வருமானம் ரூ.4,00,000 மேல் இருப்பவர்கள் எந்தப் பிரிவின் கீழ் இருந்தாலும் அவர்கள் அனைவரும் OC-யில் சேர்க்கப்பட வேண்டும்.


2. கல்லூரி, அரசுத் துரையில் பணி என்று இட ஒதுக்கீடு சம்மந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் பின் வரும் விதிகள் பொருந்தும்.
  • 2.அ. 0C பிரிவினருக்கு எந்த வகையான இட ஒதுக்கீடும் கிடையாது
  • 2.ஆ. BC மற்றும் MBC பிரிவினர் ஒரே ஒரு முறை மட்டும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தலாம் (ஒரு முறை இட ஒதுக்கீட்டை பயன்படுத்திவிட்டால், பயன்படுத்தியவரும் அவருடைய குடும்பத்தினரும் OC-யில் சேர்க்கப்படுவார்கள்)
  • 2.இ. SC மற்றும் ST பிரிவினர் ஒரே ஒரு முறை மட்டும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தலாம் (ஒரு முறை இட ஒதுக்கீட்டை பயன்படுத்திவிட்டால், பயன்படுத்தியவரும் அவருடைய குடும்பத்தினரும் BC-யில் சேர்க்கப்படுவார்கள்)
  • 2.ஈ. கல்வி உதவித் தொகைகள் பெறுவது போன்றவை இந்தக் கணக்கின் கீழ் வராது.
  • 2.உ. இட ஒதுக்கீட்டின் மூலம் கல்லூரியில் இடம் பெற்று, அதனால் ஒருவருடைய பிரிவு SC, ST-யில் இருந்து BC-க்கோ, BC, MBC-யில் இருந்து OC-க்கோ மாற்றப்பட்டாலும் அவர் எந்தப் பிரிவின் கீழ் இட ஒதுக்கீட்டை பெற்றரோ அந்தப் பிரிவினருக்கு அக்கல்லூரியில் தரப்படும் கல்வி உதவித் தொகை மற்றும் இதர சலுகைகளை பெற தகுதியானவரே.
  • 2.ஊ. BC மற்றும் MBC பிரிவினர் OC-யில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு விதி 2.அ-வும் , SC மற்றும் ST பிரிவினர் BC-யில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு விதி 2.ஆ-வும் பொருந்தும்.
  • 2.எ. ஒரு குடும்பத்தில் கனவன் மனைவி ஆகிய இருவரும் வெவ்வேறு பிரிவினைச் சார்ந்தவர்களாக இருப்பின் இரு பிரிவுகளில் எது உயர்ந்த பிரிவோ அப்பிரிவே அந்தக் குடும்பத்தின் பிரிவாக மாற்றப் பட வேண்டும்.


3. மேலே 2-வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பம் என்ற வார்த்தையின் விளக்கம் பின்வருமாறு
  • 3.அ. இட ஒதுக்கீட்டை பயன்படுத்தியவரின் குடும்பம் என்பது, பயன்படுத்தியவரின் மனைவி/கனவர் அவர்களுடைய குழந்தைகள் மற்றும் சந்ததியினரையும் உள்ளடக்கியது.
  • 3.ஆ. இட ஒதுக்கீட்டை பயன்படுத்தியவரின் தாய் தந்தை சகோதரன் சகோதரி ஆகியோர் அவருடைய குடும்பதில் சேர்க்கப்படமாட்டார்கள்.


4. ஆவணங்கள் பராமரிப்பு மற்றும் பிரிவுகள் மாற்றம்
  • 4.அ. இட ஒதுக்கீடு சம்மந்தப்பட்ட அனைத்து குறிப்புகளும் சான்றிதழ்கள் வழங்கலும் கணினி மயமாக்கப் பட வேண்டும்.
  • 4.ஆ. இட ஒதுக்கீட்டின் மூலம் ஒருவருக்கு சலுகைகள் வழங்கிய பிறகு, இட ஒதுக்கீடு வழங்கிய அந்த நிறுவனம் சம்மந்தப்பட்ட நபரின் பிரிவுச் சான்றிதழில் "இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்பட்டது" என்ற வாசகங்களுடன் கூடிய தங்களது அலுவலக முத்திரையை பதிக்க வேண்டும்.
  • 4.இ. இட ஒதுக்கீடு வழங்கும் நிறுவனங்கள் அது குறித்த விவரத்தை உடனே அரசுக்கு அனுப்ப வேண்டும். அந்த விவரத்தைக் கொண்டு அரசுக் குறிப்புகளில் சம்மந்தப்பட்ட நபர் மற்றும் அவருடைய குடும்பதினரின் பிரிவுகள் மாற்றப்பட வேண்டும்.
  • 4.ஈ. சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அனுப்பும் குறிப்புகளை அரசுக் குறிப்புகளுடன் ஒப்பிட்டு, அந்த நபருக்கு சரியான பிரிவின் கீழ் தான் சலுகைகள் தரப்பட்டுள்ளதா இல்லை போலியான சான்றிதழ்கள் முலம் சலுகைகள் பெறப்பட்டுள்ளதா என்பதும் சரி பார்க்கப்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


5. இட ஒதுக்கீட்டுச் சதவிகிதம்(%)
  • 5.அ. இட ஒதுக்கீடு என்பது மொத்தம் உள்ள இடங்களில் 50%-திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • 5.ஆ. அந்தந்த பிரிவுகளில் உள்ள மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதங்கள் அமைய வேண்டும்.
  • 5.இ. SC, ST-யில் இருந்து BC-க்கும், BC, MBC-யில் இருந்து OC-க்கும் மக்கள் முன்னேறுவதால் அந்தந்த பிரிவுகளில் எற்படும் மக்கள் தொகை கணக்கின் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதங்கள் வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப் பட வேண்டும்.


6. மேலே 5.இ-யில் குறிக்கப்பட்டுள்ளதின் அடிப்படையில் மக்கள் OC-யில் சேரச்சேர மற்ற பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டுச் சதவிகிதங்கள் குறைக்கப்பட்டு, ஒரு நிலையில் அனைவருமே மிகவும் முன்னேறிய பிரிவான OC-யில் சேர்க்கப்பட்டு சாதி வாரி இட ஒதுக்கீடு என்பதே முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். இதுவே இந்த புதிய இட ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இறுதிக் குறிக்கோள் (final goal).


7. அதன் பின் பொருளாதார ரீதியாக மட்டுமே ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில் அன்றைய பண மதிப்பீட்டின் படி ஆண்டு வருமானம் குறிப்பிட்ட தொகைக்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு 10% முதல் 25% வரை இட ஒதுக்கீடு தர புதிய சட்டம் ஒன்றை இயற்றலாம்.


- சட்டதுரை
 

2 comments:

  1. Is this the real rule in current scenario?

    ReplyDelete
  2. ila da... ithu sata thurai oda proposal...;)

    nama aatchiku vantha real akum..;)

    ReplyDelete